சந்தோசப் பூங்காற்றே

புல்லில் உறங்கும் பனித்துளி - என்
*****நெஞ்சில் விழுந்து சிதறி
நெல்லில் அசைந்து வீசும் - குளிர்
*****காற்று தேகம் தழுவி
கல்லின் உட்புறம் கசியும் - துளி
*****ஈரம் என்னுள் பரவி
செல்ல மகளின் சிரிப்பில் - நிதம்
*****கலந்து இன்பம் தருமே......


காட்டில் துள்ளி யோடும் - இளம்
*****மானின் விழிகள் திறந்து
வீட்டின் குடத்தில் நீராடி - கருமை
*****நிற நீள்குழல் முடிந்து
தோட்டம் மலரும் பூக்கள் - அறை
*****முழுதும் மணம் கமழ்ந்து
பாட்டில் பக்தி நிறைந்து - துயில்
**கலையும் மனைவி அருளாளே......


மேகம் பொழியும் மழையில் - நிலம்
***விளைந்து இல்லம் செழிக்கும்
தாகம் தீர்க்கும் தென்னையின் - இளநீர்
*****குடித்துப் பசி மறக்கும்
நாகத்தின் நஞ்சு இல்லாது - கறந்தப்
*****பாலாய் மனம் இருக்கும்
சோகமதைத் தூரம் விரட்டி - நாளும்
***சுகம் அளிக்கும் வாழ்விதுவே......

எழுதியவர் : இதயம் விஜய் (26-Feb-17, 12:56 pm)
Tanglish : santhosap Poongatre
பார்வை : 1031

மேலே