வாழ்த்து மடல்- இணையம்
எண்ணங்களை எழுத நினைத்ததும் முகத்தை திருப்பின திறவுகோல் !
உடைந்து விடக்கூடாதென கூறி சிறை வைத்தன என் எண்ணங்களை !
வெற்று காகிதமல்ல நாங்கள் விடுதலையின் வேள்விகள் என்றன காகித பக்கங்கள் !
கடவுச்சொல்லும் இல்லை !கள்வரின் பயமும் இல்லை !
என் எண்ணங்களை பேசிட நாட்களும் இல்லை !
அதை கேட்டிட தெருவோர திண்ணைகளும் அன்பான ஆட்களும் இல்லை !
என் எண்ணங்களை எழுத இவ்வுலகம் எனக்களித்த இன்னொரு உரிமை இணையம் ! இணையத்திற்க்கு நன்றி பராட்ட நான் எழுதிய வாழ்த்து மடல் இப்படிக்கு என் எண்ணம்...