ஒரு ஊர்ல, ஒரு மாமியார்

ஒரு ஊர்ல, ஒரு மாமியார்!
பொண்ணு, மாப்பிள,
ஹாடுவேரு, ஸாப்ட்டுவேரு,
கல்யாணமான புதுசுல,
சர்பத்துல போட்ட, நன்னாரி வேரு,
நடுவுல கொஞ்சம், ஜாபு டென்ஸனு,
ரெண்டு பேருக்கும்,
ஜாலம் போடா வழயாச்சு,
ஒரு ஊருல ஒரு மாமியாருக்கு.
காதலத்தான் காயவச்சு,
குசும்பத்தான் பத்தவச்சு,
சண்டயத்தான் போடவச்சு,
ஆயரங்காலத்து பயிருக்கு, வேலியா இல்லாம,
மேஞ்சிப்புட்டா மாமியாரு,
இவ தண்ணியில வச்ச, வெண் பாஸ்பரஸ்சு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (1-Mar-17, 9:24 am)
பார்வை : 89

மேலே