வெல்ல முடியும்

வெல்ல முடியும் என
நீ நினைத்தால் ....
வலிகள் எல்லாம்
காற்றாய் பறக்கும் ...!
சோதனை எல்லாம்
மணல்கயிராய் போகும் ...!
நேரத்தோடு போட்டியிட்டு
முந்திச்செல்வாய் ....!

வெல்ல முடியும் என
நீ நினைத்தால்...
முயற்ச்சி செய்து செய்து
உன்னை நீ செதுக்குவாய் ...!
தன்னம்பிக்கை உன்னை
தலைநிமிர்ச்செய்யும் ...!
தடைக்கற்கள் எல்லாம்
உன் பாதம் பட்டு
துகள்களாய் போகும்...!

வெல்ல முடியும் என
நீ நினைத்தால்...
உன்னை நீ வென்றுவிட்டதாய்
பூரிப்படைவாய் ...
அது உலகை
வெல்லும் ஆயுதமாய்
உன்னை மாற்றும் ...!

எழுதியவர் : (1-Mar-17, 1:35 pm)
Tanglish : vella mudiyum
பார்வை : 269

மேலே