இயற்கை உணவே இசைவு

விளம்பர ஈர்ப்பால் விதவிதமா யுண்ண
உளம்விழைந்தால் காயத்திற்(கு) ஊறே! - அளவாய்
நியதியுடன் உண்டு நெடுங்காலம் வாழ
இயற்கை உணவே இசைவு .

( நேரிசை வெண்பா )

மயக்கும் விளம்பர வாசக யீர்ப்பால்
செயற்கை யுணவைச் செலவழித் துண்டோம்
பயனெது மின்றிப் பலநோயு முற்றோம்
இயற்கை உணவே இசைவு.

( இன்னிசை வெண்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Mar-17, 2:14 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 52

மேலே