அவள் என் அருகில் இல்லை

நிலாமுகம் இலாவிடில்
என்னாகுமோ என் தோரணை
என் மேனியில் உன் வாசனை
படாவிடில் என்னாகுமோ
நான் பார்த்ததாலே பூத்தவள்
வினாக்கள்போட்டு கொல்லுவாள்
கண்ணில் மைஉடுத்தியே
எந்தன் மெய்கசக்கினாள்
உன் கை கோர்த்த நேரம்
என் கன்விளிம்பில் ஈரம்
நீ பேசிய வார்த்தைகள்
வீசிய பார்வை
சிதறிய புன்னகை
பதறிய காட்சிகள்
ரசித்த ரோஜா செடி
சாய்ந்திருந்த வாசல்படி
கொடுத்த சாக்லேட்
வாங்கிக்கொண்ட ரோஜா
நீ விட்டு சென்ற நெற்றி பொட்டு
இந்த நான்குநாள்
ஞாபகங்களுடன்
நகர்த்திக்கொண்டிருக்கிறேன்
நாட்களை
கிழிய மறுக்கும் நாள்காட்டி காகிதம்
நகர மறுக்கும் கடிகார முள்
நரக வேதனை எனக்குள்
எப்போது வருவாய்
எனை மீட்க
காத்திருக்கிறேன்
காதலுடன்.