மனிதா உனக்கோர் நிலையேது

தமிழ் தமிழென உந்தன் கூவல்
அது ஆரியம் கடந்து ஒலித்திடும்,
மக்கட் பயில்மொழி தமிழாஎன்றிட
மனமோ ஏனோ மறுதலிக்கும்..
ஊழலொன்று கண்டீரா
ஒற்றை ஆட்சி நீ கேட்பாய்,
கைகூடா பணியேற
லட்சம்தனை விட்டெறிவாய்..
முண்டாசு தான் அணிந்த
புரட்சியவனின் வரி பயில்வாய்,
வீதிக்கொரு சாதி கொண்டு
அதில் வீரம் தேடி களிப்புறுவாய்..
மனமே நித்தம் மாறுவதை
மனிதமென்று கொண்டாயோ,
நீ மனிதன் என்று கொள்வதினால்
அதன் மதிப்பு குறைதல் ஆகாதோ....

எழுதியவர் : வினோ.... (1-Mar-17, 10:14 pm)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 373

மேலே