தங்கை பாசம்
பாசமான தங்கையின் பண்பான அண்ணனே
நேசமுடன் எனைத்தாங்கி நேர்மையுடன் வளர்த்தவனே
மாசற்றக் கல்விதனைப் மாந்தவும் செய்தவனே !
வாசமுள்ள தங்கையான் வணங்குகின்றேன் சோதரனே !
நீசங்கள் எனைத்தாக்காது நித்திரையும் மறந்துமே
காசினியில் ஆளாக்கினாய்! காலமெல்லாம் மறவேனே !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்