பிரச்சார பீரங்கி -சிறு கதை

பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடை, முக்கிய தலைவர் இன்னும் வரவில்லை. நேரத்தைக் கடத்த வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் கூட்டம் கலைந்துவிடும். என்ன செய்வது என யோசித்தார் விழா அமைப்பாளர். சட்டென்று அவருக்கு யோசனை உதித்தன. யோசனையை செயல்படுத்த…“அண்ணே வாங்கண்ணே” நீங்க பேசுங்க” என்று ஒருவரை வலியவே அழைத்து பேச சொன்னார்.
அமைப்பாளர் ….. அழைப்பிற்கு….” சரிப்பா….” என பேச தயாரானார் அந்த பிரமுகர். அந்த பிரமுகரை இப்படி அறிமுகப்படுத்தினார்கள் ஒலிப்பெருக்கியில்
“அண்ணன் வேலவனார் நமது இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிப் பேச அன்புடன் அழைக்கிறோம்”“அண்ணன் வேலவனார்“வாழ்க...வாழ்க...வாழ்க“ நீண்ட கைத்தட்டல்கள் ஓய்ந்தபின்.
“ அலைக்கடலென திரண்டிருக்கும் இப் பொதுகூட்டத்திற்கு தலைமை ஏற்க வரும் நமது இயக்கத்தின் தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அண்ணன் அவர்களே….”
“நமது இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிப் பேசி வரும் அண்ணணுக்கு “மலா; மாலையை அணிவிக்கிறோம்”
மாவட்ட செயலாளர்களே…….
“இருபதாவது வார்டு சார்பாக அண்ணணுக்கு கதராடையைப் போர்த்துவதில் பெருமை அடைகிறோம்.”
“மகளிர்; அணியின் மாதர்குல திலகங்களே, கண்மணிகளே நமது இயக்கத்திற்கு நீங்கதான்” என முடிப்பதற்குள்
“மகளிர் அணியின் சார்பாக அண்ணணுக்கு தஞ்சாவூர் தாம்பலத் தட்டு அளிக்கிறேன்”
“அண்ணே கொஞ்சம் இருங்க…..”நமது இயக்கத்தின் தலைவர் மேடையருகே வந்துக் கொண்டிருக்கிறார் .வந்து விட்டார்….வந்தே விட்டார்”
“தலைவர்;” வாழ்க… தலைவர்; வாழ்க..தலைவர் வாழ்க என கோஷத்துடன் மேடையேறிய “தலைவர்;”
“அலைக் கடலென திரண்டிருக்கும் பொது மக்களே…...அவர்களே… இவர்களே….இவ்வளவு நேரம் நமது இயக்கத்தின் “கொள்கைகளை” விளக்கி தெள்ளத் தெளிவாகஉரையாற்றிய தம்பி வேலவனுக்கு “பிரச்சார பீரங்கி” என பட்டம் வழங்குவதில் பெருமையடைகிறேன்.” என்றாரே.
அதைக் கேட்டதும் பிரச்சார பீரங்கி இன்னும் வெடிக்க அடுத்த கூட்டத்திற்கு ஆட்டோவில் ஏறியது.
கவிஞர்கே. அசோகன்,