காதல் விருந்து

லப்...டப்.........லப் ..டப் ...
என்ன ஓர் சத்தம்
எங்கிருந்து வருகிறது ??
விழிகள் சுற்றி சுற்றி
மயக்கம் தான் வந்தது ,ஆனால்
ஓசையின் இசை குறையவேயில்லை
உடல் முழுதும் பதட்டம்
வியர்வை துளிகள்
உடலின் மேல் நகர்வது
என்னை ஏதோ ஓர் இனம்புரியா
உணர்விற்கு அழைத்து செல்கிறது
ஒரு நிமிடம் என் பார்வையை
உலகத்தின் பக்கம்
மறைத்து
என் மனம் உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு
செவி கொடுக்க தொடங்கினேன்
அது,புரியாத வார்த்தை
ஆனால்
நான் புரிந்து கொள்ள வேண்டிய வார்த்தை
என்பதில் இருந்து
என் மன இறுக்கம் இலகவே இல்லை
ஏக்கம் அதிகரிக்க அதிகரிக்க
எண்ணங்களில் ஏதோஒரு குழப்பம்
வட்டமிட தொடங்கியது
அய்யோ !!!!!
என்ன ஓர் சிக்கல் இது ??
காதல் உணர்வை
அறியாததால்
நான் செய்ய வேண்டிய
காதல் விருந்து
கனவிலும் காண முடியா
சொர்ப்பனம்
போலிருக்கிறது .... ??