கோபம் வேண்டாம் கண்ணா

வார்த்தை சொல்ல வேண்டாம் 

உன்  பார்வை  கேள்வி போதும் 

என் கண்ணை பாரு போதும் 

இனி என்ன சொல்ல வேண்டும் 


கண்ணால ஒரு  காதலும் ஆசுனு 

கவிதையாய் இருந்த காலமும்

போகட்டும் விடுனு  சொன்ன சொல்லுக்கு 

மௌனமும் சுமை என ஆனதும்

எத்தனை கேள்வியும் எத்தனை பதிலும் 

நம் தூரத்தை என்றும் நிறப்பாது


வானிலை போல மனமும் மாறுமானு 

கொட்டிய அன்பை கேள்வி கேட்கலாம்

தண்ணில  எழுதிய கதைய  போலவானு 

விட்ட வார்த்தைகள அழிச்சி போடலாம்

என்  கண்கள் வாழும் காலம் வரை

உன் நினைவுகள் என்றும் தூங்காது 


உன்ன விட்டு போனா 

என் உயிரும் என்னது இல்ல

உன்ன  சொன்னா சொல்லு  

என்ன கொல்லும் முதல்ல 


sri

எழுதியவர் : sri (3-Mar-17, 6:30 pm)
சேர்த்தது : srikavi 110
பார்வை : 411

மேலே