வன்முறை ஒரு ஆயுதம்

மரத்தால்
இலையும் வாழும்
இலையால்
மரமும் வாழும்
மனித நீ !

நீ ஏன் பிறந்தாய் ,
எதற்காக வாழ்கிறாய் ,
உன் வாழ்வின்
அர்த்தம் என்ன ?

முடிந்தால் போராடு ,
முடவில்லையேல்
மாண்டுவிடு ,
மனிதா
நீ படைக்கபிறந்தவன்
அழிக்க இல்லை !

வன்முறை ஆயுதம்
ஜெயித்ததாக
வரலாறுகள் இல்லை ,
அன்பும் அகிம்சையும்
தோற்றதாகவும்
வரலாறுகள் இல்லை !

வன்முறை
எந்த மதமும்
அங்கீகரித்ததில்லை ,
எந்த கடவுளும் அங்கீகரித்ததில்லை
பின்பு எந்த அதிகாரம்
உன்னை ஆட்டிவைக்கிறது !

வன்முறை
ஒரு கோழைத்தனம் ,
திருட்டு
ஒரு சோம்பேறித்தனம் ,
மனிதா
நீ ஒன்றும் மிருகமில்லை ,
உனக்கு ஆறாவது
அறிவு படைதானே
இறைவன்
அதை ஒருமுறையாவது
உபயோகித்துபார் ,
நீ மனிதன் என்பதை
மெல்லே மெல்ல உணர்வாய் !

மனிதா
நீ ஒன்றும் கடவுளாக
வாழத்தேவை இல்லை
மனிதனாக வாழுந்துப்பார்
மற்றவரையும் நேசித்து பார் ,
மரத்தின் இலைகூட
மரத்திற்கே
எருதாகிறது ,
மனிதா நீ?

வன்முறை ஆயுதம்
உன்னைமட்டும்
விட்டுவைக்குமா!


எழுதியவர் : வினாயகமுருகன் (12-Jul-11, 1:50 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 910

மேலே