தாய் மாமன்
இவன் உறவுகளுக்கு நல்ல
முறை கொண்டு வந்தவன் !
ஒரு தாய் வயிற்றின் ரத்த பந்தம்
உடன் பிறப்புகளிடம் உரிமை கொண்டவன் !
இவன் பாசங்களில் என்றும் நிகரானவன்
குடும்ப நிகழ்வுகளில் என்றும் முதலாய் -
முழுதாய் இணைந்தவன் !
சீர் முறை செய்வதில் செம்மையானவன்
சொந்தம் விடாமல் சம்மந்தம் செய்பவன் !
சந்தோஷத்தில் கூடி மகிழ்வான் - இன்னும்
கஷ்டங்களில் தன்னை பகிர்ந்து கொள்வான் !
இன்னும் தன் உடன் பிறப்புகளிடம் இறுதிவரை -
மாறாத பாசமாய் குடும்பத்தின் தாய் மாமன் !
தாய் மாமன் !
உறவுக்கு என்றுமே உரிமையானவன் !
ஸ்ரீவை.காதர்.