தாகம்

சட்டை பையில் உள்ள காசை -
சட்டம் போட்டு எடுக்கறான் !
சாதகமா பேசியே -
சட்டத்தையும் திணிக்கரான் !

சேர்த்து வைத்த பணமெல்லாம் -
செல்லாதுன்னு சொல்லியே !
சேர்க்க நினைக்கும் மக்களையும் -
திட்டம் போட்டு துரத்தறான் !

தண்ணீரையும் உறிஞ்சியே -
தனியாருக்கு விக்கறான் !
தாகத்துக்கு தண்ணீர் கூட -
தண்டல் வரியை போடுறான் !

கரைவேட்டி காரனெல்லாம் -
காச வாங்கிகொண்டதால் !
நீதி வேண்டி மக்களோ -
வீதியில நிக்குது !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (6-Mar-17, 2:08 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 374

மேலே