அரியாசனம்

அனல் பறக்குது அரசியல் களம் !
அத்தனையும் அரியாசனம்வேண்டி !
அரியாசனம் !
அமர்வதற்கு அல்ல உன்னை -
ஆள்வதற்கு !

குழப்பத்திற்கு தூபம் போட்டு ;
குதூகலம்! கும்மாளம் !
குழம்ப வேண்டாம் !

உட்க்கார விரும்பாத -
உழைக்கும் வர்க்கமே !
ஆளுமையை கையில் எடுக்குது -
அதிகார வர்க்கம் உன் -
அமைதியை கலைந்து பார் !
உண்மை புரியும் !

ஐந்து நிமிட பயணத்துக்கே ;
ஓட்டுநர் இருக்கை தவிர -
ஓடோடி சண்டைபோடும் மானிடனே !

அரியாசனம் சுகம் அறியா அப்பாவி நீ !
அறிவுக்கண்ணை திறந்து பார் !

ஆட்சியை பிடிக்க ஆயிரம் பொய் !
மாற்றம் தருவதாய் மக்களை ஏமாற்றும் !
மனங்களை கொள்ளைகொள்ள ;
பணங்களை இறைக்கும் !

விழித்துக்கொள் !
அரியாசனம் -
உனக்கும் சொந்தம் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (6-Mar-17, 1:20 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 137

மேலே