பெற்றோர்கள்

பெற்றோர்கள் என்றவுடன் இன்றய கால சூழ்நிலையில் முதியோர் இல்லம் தான் நினைவுக்கு வருகிறது. ஏனேன்னறால் எல்லோரும் பரபரப்பான வேலையில் இருக்கிறோம். தன் தாயையோ தந்தையையோ நலம் விசாரிக்க நேரம் இல்லாமையால் இருக்கிறோம். வயதானவர்களை ஒதுக்கி வைப்பதில் மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாளைக்கு நமக்கும் இந்த நிலமைதான். எங்க ஊரில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள். அதாவது 'காஞ்ச ஓலையை பார்த்து பச்சை ஓலை சிரித்ததாம்' முதியர்களுக்கு புரியும். இன்றைய தலைமுறையினருக்கு புரியாது. அதாவது பனைமரத்தில் உள்ள ஓலை கொஞ்சகாலம் கழித்து தானே காய்ந்து உருந்துவிடும். அப்பொழுது பச்சை ஓலை சிரிக்குமாம். இவனை பார் காய்ந்து விட்டது பார் என்று ஏளனம் செய்யுமாம். அந்த பச்சை ஓலைக்கு தெரிவது இல்லை தானும் ஒரு நாள் காய்ந்து உதிர்ந்து விடுவோம் என்று. அது போல் தான் நாமும். நமக்கும் வயது ஆகும். நாம் எப்படி நமது பெற்றோர்களை மதித்து நடக்கிறோமோ அது போல் தான் நம் பிள்ளைகளும் நடக்கும். அதை மனதில் வைத்து நடங்கள். பெற்றோர்களை முதியோர் இல்லம் அனுப்பாதீர்கள். முதியோர்களை பார்க்கும் பொறுப்பு வீட்டில் இருக்கும் பெண்கள்தான் பொறுப்பு. ஏனேன்றால் அவர்கள்தான் வீட்டில் இருக்கிறார்கள். தனக்கு இடஞ்சல் வரும் என்று முதியவர்களை அடித்து துரத்தும் எத்தனை மருமகள்கள் மகன்கள் இருக்கிறார்கள். பெற்ற வயிறு எரியவிடக்கூடாது. அந்த வயற்றில் இருந்து தான் நாம் வந்து இருக்கிறோம். அந்த வயறு குளிந்தால் தான் நம் வாழ்கை குளிரும். பெற்றோர்களை அழ விடாதீர்கள் அது உங்களை நீங்களே அழ வைப்பது போல். பெற்றோர்களை நீங்கள் பாருங்கள் உங்கள் வாழ்கையை கடவுள் பார்த்துக்கொள்வார். எவ்வளவு துன்பம் வந்தாலும் பனி போல் விலகிவிடும். உங்களோடு கடவுள் இருப்பார். பணம் மட்டும் இருந்தால் போதாது கொஞ்சம் பாசமும் இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கும்பிடும் முன் உங்கள் பெற்றோர்களை முதலில் கும்பிடுங்கள். அந்த குலதெய்வம் உங்கள் வீட்டில் நீங்கள் தேடாமல் வந்து இருக்கும். பாவம் தீர பாதயாத்திரை செல்ல வேண்டாம். பெற்றோர் பாதத்தை தொட்டால் போதும். அரை வயிறு கஞ்சானாலும் அன்புடன் ஊற்றுங்கள் உங்கள் பெற்றோர்கள். எல்லா வளமும் வேண்டுமா பெற்றோரை வீட்டில் வைத்து புஜியுங்கள். அவர்களுக்கு விருந்து வைக்க வேண்டாம் விரட்டி மட்டும் அடிக்காதீர்கள். உங்கள் நலன் கருதி உங்கள் மாயாசங்கர்

சங்கரநாராயணன்

எழுதியவர் : (7-Mar-17, 8:49 pm)
Tanglish : petrorgal
பார்வை : 3133

மேலே