கம்லா

மாமா....
@@@@@
சொல்லும்மா தாமரை.
@@@@@
உங்களுக்கு மாமாவும் அத்தையும்
சிவராஜன்-ன்னு பேரு வச்சாங்க.
உங்க பாட்டி உங்கள சிவராசு-ன்னு
கூப்புடுவாங்க. ஆனா நீங்க
ஒரிசாவுக்கு ரண்டு மாத பயிற்சிக்குப்
போனப்ப சிவராஜன்-ங்கற உங்க
பேர 'ஷிவ்ராஜ்'-ன்னு மாத்திட்டீங்க.
எதுக்கு மாமா உங்க பேர
மாத்தினீங்க?
@@@@@
தாமரை, உனக்கு உன்னோட அம்மா
அப்பா வச்ச பேரு ஞாபகம்
இருக்குதா?
@@@@@
ஓ...... அத எப்பிடீங்க மாமா மறக்க
முடியும்? கமலா-ங்கற எம் பேருக்கு
தமிழ்ல 'தாமரை'-ன்னு அர்த்தம்னு
சொல்லி நீங்கதான்
எம் பேர மாத்தீனீங்க. சரி உங்க பேர
'ஷிவ்ராஜ்'-ன்னு எதுக்கு
மாத்தினீங்க?
@@@@
எஞ் செல்லம் தாமரை, கமலஹாசன்
இந்திப் படத்தில நடிக்கப் போயி
'கமல்ஹாசன்' ஆனாரு. வட
இந்தியாவில இருக்கற
வர்த்தகர்களும் அங்க உள்ள
வாடிக்கையாளர்களும் தன்னோட
பேர ஒழுங்கா உச்சரிக்க
முடியாதுன்னு மல்லையா 'மல்யா'
ஆனாரு. நம்ம தமிழ் நாட்டைச்
சேர்ந்த தொழிலதிபர் சிவநாடார்
'ஷிவ் நாடார்' ஆனாரு. அது
மாதிரிதான் இந்த சிவராஜன்
சிவ்ராஜ் ஆகிட்டான். உம் பேரத்
தாம்ர-ன்னு மாத்தினா நல்லா
இருக்காது. வேற என்ன
செய்யறது?....
@@@@@@
மாமா எங்க அம்மா அப்பா எனக்கு
வச்ச கமலா-ங்கற பேர வட
இந்தியாவில இருக்கறவங்க எப்பிடி
உச்சரிப்பாங்க?
@@@@
ஆங் ... இப்ப ஞாபகம் வந்திருச்சும்மா
தாமரைச் செல்லம். உம் பேரு
இனிமே 'கம்லா, கம்லா, 'கம்லா'.
போதுமா?
@@@@
தேங்குசுங்க எஞ் செல்ல மாமா
ஷிவ்ராஜ்.
'கம்லா' ரொம்ப சுவீட்டா
இருக்குதுங்க மாமா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றி:
indiachildnamescom