அவன் குழந்தையா
மகன்: அம்மா!! சாப்பிட என்ன செஞ்சி இருக்க...
அம்மா: உனக்கு என்ன வேணும்-னு சொல்லு டா கண்ணா.. செஞ்சி தரேன்.
அப்பா: சாப்பிட என்ன டி செய்ய போற??
அம்மா: நான் என்ன செஞ்சாலும் நீ துன்னு தான் ஆகணும்.. புரிஞ்சுதா..
அப்பா: அவனுக்கு மட்டும் கேட்டது செஞ்சி கொடுக்குற...
அம்மா: அவன் குழந்தை... ஆசையா கேக்குறான்.
அப்பா: ஏய்!!! அவனுக்கு 27 வயசு ஆகுது டி. அவன் குழந்தையா...
அம்மா: ஆமா!!!
அப்பா:எனக்கு 65 வயசு ஆகுது டி அப்போ நான் யார்?
அம்மா: போடா... கிழவா...
அப்பா: 😡😡😡😡😡😡😡
பெற்ற குழந்தைக்கு எத்தனை வயது ஆனாலும் தாய்க்கு அவர்கள் எப்போதும் குழந்தை தான்.
ஆனால் சில முட்டாள்களுக்கு அது புரிவதில்லை. முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள்.