பெண்மையை போற்றுவோம் -கங்கைமணி

பெண்ணென்ற ஓர் பெரும்
பிறப்பொன்றைப் போற்றுவோம்.
கருக்கொண்டு உயிராக்கும்
சிறப்பொன்றைப் போற்றுவோம் .
தாயாகி தாலாட்டும்
தியாகத்தைப் போற்றுவோம்.
மடிமீது மகளாகும்
மகிழ்ச்சிதனைப் போற்றுவோம்.
தோழமையாய் தோள்சாயும்
தோழியரைப் போற்றுவோம்.
மனையாளாய் மகிழ்விக்கும்
மங்கையரைப் போற்றுவோம்.
தலைகோதி தலைசாயும்
தங்கையரை போற்றுவோம்.
நரைகூடி தடுமாறும்
பெருமகளை போற்றுவோம்.
மென்மையான மலரினத்தை
வன்மமற்று போற்றுவோம்.
-கங்கைமணி