என்னசொல்லப் போகிறாய்

என்னசொல்லப் போகிறாய்?
உன் என்ன அலைகளால்,இதயத்தில் அழுத்தம்,
அதிகரித்துக் கொண்டே...
நீயோ, திரும்பியும் பார்க்காது, குனிந்த தலை நிமிராது,
மௌனத்தின் பொருள் புரியவில்லை,சிந்தித்தே சோர்ந்தது மூளை!
பிளவு படும் நிலையில், என் இதயம்,
பிளவில் சிதறுவது, உன் எண்ணம்தான்,
அனாதை ஆகப்போவதும், உன் எண்ணங்கள்தான்!
என்ன சொல்லப் போகிறாய்?

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (9-Mar-17, 12:00 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 132

மேலே