வீரம் கொஞ்சம் காரம்

திமிலடக்க
திமிரோடு
புறப்பட்டோம்.

இடைமறித்து
இடம் பெயர்ந்தோரே
பசுவதை தடை
பெற்றோரே

தமிழ் மண்ணின்
வீரம் அறிவீரோ.
வீர மங்கையின்
காளையை அடக்கி
தாரமாக்கி கொள்ளும்
பண்பாடு அறிவீரோ.

எங்களுக்கு
அகிம்சையும் தெரியும்
தீவிரமும் தெரியும்.

புலித்தோல்
போர்த்திய
மனிதர்களே
நங்கள்
பசுத்தோல்
போர்த்திய
காளைகள்.

பண்பாடும் தெரியும்
போர் பாடும் தெரியும்.

தினவெடுத்த தோளோடு
போர்க்களம் செல்வோம்
தடை வந்தால்
மனம் ஒத்து உலகம் காண
உரைப்போம்.

எங்களோடு
வேண்டாம்
உங்கள் ஜல்லிக்கட்டு.
காளையை அடக்கிய
காளை நாங்கள்.

தடை வேண்டுமா
எங்கள்
முரட்டு காளையோடு
விளையாடி பாரு.

அவிழ்த்து விடட்டுமா
அலங்காநல்லூரை.

உன்
புறமுதுகு புண்ணாகி போகும்.
எட்ட நின்று பார்
தமிழன் வீரமும்
சொல்லின் காரமும்.
புரியும்.

எழுதியவர் : ரா.Srinivasan (9-Mar-17, 12:17 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 131

மேலே