முத்தம்

முத்தம்!

ஏன் மறைத்தாய், இந்த உண்மையை?
பெண்ணே! இன்று அம்பலமாச்சே!
கண்டு பிடித்தேன்! நீ மறைத்ததை,
வெற்றி பெற்றேன்! என் சோதனையில்.
நான் முத்தமிட்டது, உனக்குத் தானே!
வெட்கப் படுதே, அந்த நிலவும் சேர்த்து!
நீயே பாரேன், வெட்கம் தாங்காமல்,
கரிய மேகத்தில், ஒழிந்து கொள்வதை!
உன் தங்கை தானே , அந்த நிலவு!
சமரசம் செய்யேன், விரைவில் சென்று.
அவள் எதிரில், இந்தத் தவறு, நடக்காதே இனி மேலே!
சம்மதம் என்று நீ சொன்னால்,
பறக்கும் முத்தம் கிடைக்கும்,அவளுக்கு!
தொட்டி அருகில் அழைத்து வந்தால்,
தொட்டுத் தருவேன், நீரில் மொத்தம்,முத்தம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (9-Mar-17, 12:18 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : mutham
பார்வை : 138

மேலே