என்னவளே

உன் இமையின் மையாக நானிருந்தால்
உன் கண்ணீரை நான் தாங்கியிருப்பேன்

உன் நெற்றி பொட்டாக நானிருந்தால்
உன் வெற்றித் திலகமாக நானிருப்பேன்

உன் உதட்டுச் சாயமாக நானிருந்தால்
உன் மவுனத்தை களைத்திருப்பேன்

உன் கழுத்து டாலறாக நானிருந்தால்
உன்னுடன் நானும் மின்னியிருப்பேன்

உன் கர்ப்பப் பையாக நானிருந்தால்
உன் சுமையை நான் தாங்கியிருப்பேன்

உன் கால் அணியாக நானிருந்தால்
உன் பாதத்தை தாங்கியிருப்பேன்

இவை எல்லாம் எதற்க்கடி !
உன் 'இதயமே' என்னிடத்தில்
அதனால் உன் 'சோகம்' சந்தோசம்
எல்லாமே என்னிடத்தில் என்னவளே ! ,

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (12-Jul-11, 4:29 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 456

மேலே