என் இதயத்திற்கும் கர்வம் உண்டு
![](https://eluthu.com/images/loading.gif)
உன் காதுமடல்களை கச்சிதமாய் கவ்விக்கொண்ட காதணிகளுக்கு
எவ்வளவு கர்வம் ! எவ்வளவு மமதை !
உன் உன் கால்களில் மண்டியிட்டு கிடக்கும் கொலுசுகளுக்கும்
எவ்வளவு கர்வம் ! எவ்வளவு மமதை !
உன் மார்புகளில் மயங்கி கிடக்கும் துப்பட்டாவுக்கும்
எவ்வளவு கர்வம் ! எவ்வளவு மமதை !
உன் மூச்சுக்காற்றை முத்தமிட்டே இருக்கும் மூக்குத்திக்கும்
எவ்வளவு கர்வம் ! எவ்வளவு மமதை !
உன் கழுத்தில் கவிதை எழுதும் தங்கச்சங்கிலிக்கு
எவ்வளவு கர்வம் ! எவ்வளவு மமதை !
உன் வளைக்கரங்களின் வளையல்களும்
எவ்வளவு கர்வம் !! எவ்வளவு மமதை !!
ஒவ்வன்றும் எனைப்பார்த்து கர்வமும் மமதையும் கொண்டு எள்ளி நகையாடுகையில்
உன்னைமட்டுமே சுமந்து வாழும் என் இதயத்திற்கு கர்வமும்! மமதையும் ! உண்டு என்று சொன்னால்
உண்மையே