நதியும்,கடலும்

கடல் கேட்டுதாம் நதியை நோக்கி
"என்னீரில் எப்போதும் கலக்கின்றாயே
ஏன்?" என்று; அதற்கு நதி சொன்னதாம்
" கடலே உன் கண்ணீரை கரைக்கத்தான்"
"அது எப்போது நன்னீராய் மாறுமோ
அதுவரை " அதுவே என் தலை எழுத்து
என்றதாம்.

(கண்ணீர் = உப்பு நீர் )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Mar-17, 10:39 am)
பார்வை : 294

மேலே