உன்னை போல் நானும் திருடன்
உன்னை போல் நானும் ஒரு திருடனே...!
விவசாயம் முக்கியம் என்கிறேன்
விலை கொஞ்சம் உயர்ந்தால்
வீணாய் போன அரசு என்கிறேன்.
கை நீட்டி காசு வாங்கினேன்..!
கை அழுத்தி ஓட்டு போட்டேன்..!
ஓட்டை விற்ற நானே ஒருவனும் உருப்படி இல்லை என்கிறேன்..!
உன்னை போல் நானும் ஒரு திருடனே...!
பெண் உரிமை வேண்டும் என்கிறேன்..!
ஆடை ஒழுக்கமில்லை அவளுக்கு,
அவள் ஒழுக்கமில்லை உலகிற்க்கு
என்று சொல்கிறேன்...!
இராணுவ வீரனை புகழ் பாடுகிறேன்
கொடி காசு தர புலம்பி தவிக்கிறேன்..!
உன்னை போல் நானும் ஒரு திருடனே...!
கல்வி விலைக்கில்லை,
தரமில்லை என்று சொல்கிறேன்.
என் பிள்ளையை அழைத்து,அரசு பள்ளியை தாண்டி செல்கிறேன்..!
குளிர்பானம் வெளிநாடு,
குடிக்கமாட்டேன் அதை என்கிறேன்..!
குளிக்கும் சோப்பில் இருந்து,
குடிக்கும் காபியை தாண்டி,
குரைக்கும் நாய் வரையில்
வெளிநாட்டினமாய் தேடி வாங்குகிறேன்...!
உன்னை போல் நானும் ஒரு திருடனே...!
என்னை போல் நீயும் ஒரு திருடனே...!