அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
தொடர் குறுங்கவிதை -- இரண்டாம் சுற்று
மயக்கும் விழிகள் சொல்லுகின்ற
----- மாறாக் காதல் காட்சியினைத்
தயக்கம் வேண்டா என்னுயிரே !
----- தத்தை நீயும் மொழிந்திடுவாய் .!
வியக்கு முலகம் வியந்துநிற்கும் .
------ விந்தைக் காட்சி ஏனிதுவோ?
முயற்சி செய்தால் வென்றிடலாம் .
----- முழுதா யின்பம் பெற்றிடலாம் !.
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்