ஆசைகள் உண்டு

காதலை உன்னிடம் சொல்லவும் இல்லை
உன்னிடம் அதிகம் பேசியதில்லை
உன் விழியை தவிர பார்த்ததும் இல்லை
உன் குரலைக்கூட கேட்டது இல்லை
உன் வாசனை எதுவும் அறிந்தது இல்லை
உன் குறும்பு சைகைகள் கண்டது இல்லை
உன் பெயரை சொல்லி அழைத்ததும் இல்லை
உன் சமையல் இதுவரை ருசித்ததும் இல்லை
உன் விரல்கள் தீண்டி சிலிர்த்ததும் இல்லை
உன் சுவாசம் தடவி சாய்ந்ததும் இல்லை
உன் வலை கொளுஸ் இசையில் உறங்கியதில்லை
உன் விழி தென்பட விழித்ததும் இல்லை
ஏக்கங்கள் சொல்லிட கவிஞனும் இல்லை
ஏக்கங்கள் தீர்த்திட நீயும் இல்லை
எதோ சொன்னேன் பொய்களும் இல்லை
உன்னை மறந்தால் நானும் இல்லை

எழுதியவர் : இளங்கோ (11-Mar-17, 12:21 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : aasaikal undu
பார்வை : 122

மேலே