தோழியாய் நீ
அறிமுகம் இல்லாமல்
ஆரம்பமானது
நம் பயணம்.....
முகத்தை பார்த்து கொண்ட
பின்பு
முகவரியை பகிர்ந்தோம்.....
கைகோர்த்து கதைபேசி
நெடுந்தூரம் நடந்தோம்.....
ஒருநாளும் விட்டு பிரியாமல்
தோள்சாயும் நேரமெல்லாம்
தோழியானாய் நீ.....
தொலைதூர பயணத்திலே
விட்டு பிரிந்தாலும்
நினைவெல்லாம் நிறைகிறாய்.......