என் வாழ்வு
தனிமை சுகத்தில்
இனிமை ரதத்தில்
நண்பர் துணையாய்
பயணம் சென்ற
வாழ்வின் சுகந்தங்களை
தொலைத்த கைதியாய்
விருப்பம் இல்லாமல்
வெறுப்பை புறந்தள்ளி
தணிக்க முடியா
விரகதாபத்தை
தணிக்கவே கரம் பிடித்த
மனையாளின் கெடுபிடியில்
சிக்கித் தவிக்கும்
பொறியில் அகப்பட்ட எலியாய்
சுதந்திர வனத்தில்
சுகந்தம் தரும் காற்றின்
இனிமை தழுவலில்
சந்தோஷத்தை மாத்திரமே
ஸ்பர்ஸித்த மானுடனின்
சுதந்திரம் சிதைத்த
திருமண அரக்கனின்
சிறைக் கைதியாய்
சச்சரவு இல்லாத
பிணக்கு காணாத
உற்றார் உறவினரின்
செல்லப் பிள்ளையாய்
உடன் பிறந்தோரின்
சக்கரை கட்டியாய்
வாழ்ந்தவனைப் பிணக்கிடும்
மனையாளின் ஆக்ரோஷம்
முதல்கண்டு சுயம் சிதறும்
நீச்சல் கத்து குட்டியாய்
ஆக்கம்
அஷ்ரப் அலி