நானும் வெண்புறாவும்
பளபளவென வெள்ளைச்சேலையில்
தகதகவென மின்னுகின்றாய்
கலகலவென சிரிக்கின்ற
மழலையுமே உன்னருகில்
சிலுசிலுவென அமர்ந்துகொண்டு
அடுக்கடுக்காய் உன்மீதில்
அழஅழகாய் மோனநிலை
சுற்றிச்சுற்றித் திரிந்திடவும்
பரபரவென பம்பரமாய்ச்
சுழன்றுசுழன்று நிற்கின்றாய் .
மடமடவென சிறகுகளை
பறந்துபறந்து அசைந்தாட
கிறுகிறுவென மனம்மயங்கி
விறுவிறுப்பாய் பறக்கின்றாய் !
வானவீதியில் என்னுடனே !
அழகான வெண்புறாவே !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்