என் காதலியே

மயிலே?
மயங்கினேன்; உன்
மணங்கொண்ட கூந்தல்
மார்பில் மோதி!
மழையில்
நனைந்த குயிலே? தீக்கதிர்
உன்னை தென்றல்
போலத்
தீண்டிச்செல்ல வேண்டுமடி;
உதட்டோர சிரிப்பால்
என்னை
உச்சி முகரச் செய்தாயடி;
செங்காந்தல்ப் பூவே?
வெண்பஞ்சுத் தீவே?
என் தேடலும் நீளுதடி
தேவைகள் கூடுதடி;
இடறிய கைகள்
உன் இடையில் படர;
இடைவெளி குறைந்தே
நாட்களும் தொடர;
இடைவிடாத நொடிகளாய்
மடைவராத மழைத்துளியாய்
இருகரம் பிணைத்து
இறுக்கமாய் அணைத்து
சித்திரமாய் சிறகடிப்போம்
சின்னஞ்சிறு சிட்டுகளாய்!

எழுதியவர் : சங்கேஷ் (14-Mar-17, 6:33 pm)
சேர்த்தது : சங்கேஷ்
Tanglish : en kathaliye
பார்வை : 136

மேலே