கவிதை கவிஞர் இரா இரவி

கவிதை ! கவிஞர் இரா .இரவி !

என்னைப் பற்றி கவிதை
எழுது என்று கவிதை சொன்னது
என்னவள் சொன்னாள் !

கவிதை எழுத விழிகளைப் பார்த்தேன் !
கற்ற மொழியே மறந்தது !

கவிதை எழுத இதழ்களைப் பார்த்தேன் !
காளை என்னையே மறந்தேன் !

கவிதை எழுத கழுத்தைப் பார்த்தேன் !
கடல் சங்கு நினைவில் வந்தது !

அதற்குமேல் பார்ப்பதை நிறுத்தினேன்
கவிதைக்குப் பதில் காதலே வந்தது !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Mar-17, 5:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே