காகித பூ இவன்
இறைவன் படைத்த படைப்புகளில் சொச்சம் இவன்
அவன் எழுதிய தலை எழுத்துகளில் மிச்சம் இவன்...
தாயின் வயிற்றில் சுமையாக உருவான கரு இவன்
நேசம் பாசம் ,தீண்டாமல் உருகும் துரு இவன்...
சொந்தம் பல இருந்தும் திரியும் அநாதை இவன்
பாசம் என நம்பிநம்பி மோசம் போன பேதை இவன்...
உண்ட பின் குப்பை செல்லும் எச்சி இல்லை இவன்
தேவை கண்ட பின் பிறர்க்கு தோன்றும் தொல்லை இவன் .....
பிறர் உயர அவர்கள் ஏற மிதி படும் ஏணி இவன்
அவர்கள் விரும்பும் கரைசேர்த்து தனிமையில் ஆடும் தோணி இவன்...
மனம் இல்லாமல் தொடுத்த காகித பூ இவன்
பயன் இல்லாமல் கரையோடு படிந்த உப்பு இவன்...
வாசிக்க எவரும் இல்லாத புத்தகம் இவன்
நேசிக்க யாரும் இல்லாத பதக்கம் இவன்..!!
உடலால் வளர்ந்தும் உள்ளத்தில் வளராத குழந்தை இவன்
கருவறையில் நிம்மதிகாணாமல்
கல்லறையில் நிம்மதி தேடும் இதயம் இவன்,..!!
உண்மை பாசம் ..நேசம்..அன்பு..
உலவும் புதிய உலகம் தேடி இவனது பயணம்
என்றும்.... என்றென்றும் ...