விவசாயின் கண்ணீர்

இது வரை என்ன
செய்தது...?
இனிமேல் என்ன
செய்ய போகிறது...???

யார் வந்தால் என்ன...?
யார் போனால் என்ன...?
என் வாழ்க்கை
கண்ணீர் உடன்
வாழ்வது மாறுமா...?
இல்ல நீளுமா...???

கட்சிகள் மாறும்
ஆட்சிகள் மாறும்.
எங்கள் வாழ்க்கை
மாறுமா...? இல்ல நீளுமா...???

ஓட்டு கேட்டு
வந்தவர் நிலை
மாறும்....
ஓட்டு போட்டு
போனவர் நிலை
மாறுமா...???

விவசாயின் தற்கொலையின்
எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகமானது - இனி வரும்
காலங்களில் தற்கொலையின்
நிலை குறையுமா...??
இல்ல நீளுமா...???

நம் நாட்டில்
போராட்டம், ஏமாற்றம்,
தடியடி, அடிதடி, கொள்ளை,
கொலை, பாலியல் தொல்லை,
இதில் முதல் இடம்.....

நம் வீட்டில்
துக்கம், துயரம்,
வறுமை, கொடுமை,
பசி, பட்டினி, தண்ணீர் பஞ்சம்
இதில் இரண்டாம் இடம்....

இந்த நிலை மாறுமா...?
இல்ல நீளுமா....???

எழுதியவர் : இதயவன் (16-Mar-17, 12:53 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : vivasaayin kanneer
பார்வை : 221

மேலே