அலட்சியப் பேய்

அலட்சியப் பேய்!
அலட்சியப் பேய் அலைகிறது, ஆடைபோட்டு,
பட்டபகலில் மனித சமுதாயத்தினுள்!

அலட்சியப் பேய், விரும்பி, தின்ன நினைப்பது,
சிறுவர், சிறுமியரை!

அது தரிக்கும் மாறுவேடம், ஆழ்குழாய் கிணறாக,
பஸ், வேனில் துளையாக,
பள்ளி, பொழுதுபோக்கு நீச்சல் குளமாக,
சாலையில் வாகனங்களாக,
இன்னும் பல வேடங்களில் !

தொல்லை தரும், அதன் முகத்தை,
தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன,
உடனுக்குடன்!

வருங்கால மன்னர்களை, பாடையில் போவதை,
பார்த்தது போதும், விரட்டுங்கள்,
அலட்சியப் பேயை, அண்டத்தைவிட்டு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 12:48 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 107

மேலே