சிந்தனை சிதறல்கள் -கங்கைமணி

முன்னுக்கு இகழ்
பின்னுக்கு புகழ் -தப்பில்லை.
கண்ணுக்கு திமிர்
கருத்தினால் நிமிர்-தப்பில்லை
உறவிற்கு பிழை
ஊருக்கு உழை -தப்பில்லை.
உதட்டில் சாயம்
உள்ளுக்குள் காயம்-தப்பில்லை
வெறுத்தால் செல்
பிடித்தால் கொள்-தப்பில்லை
தந்தையை திட்டு
தள்ளாடயில் தாங்கு -தப்பில்லை
இலக்கற்று ஓடு ,ஆனால்
எதையாவது தேடு -தப்பில்லை
கொடுக்காமல் செல்,ஆனால்
கொட்டாமல் செல் –தப்பில்லை
புகழுக்காக அலை,ஆனால்
பிழைப்புக்காக உழை -தப்பில்லை
தனிமையில் அழு,பின்
துணிவோடு எழு-தப்பில்லை
நிழல் தரும் மரத்தின்
கிளை ஓடிக்காதே !
நீரில்லா ஊரில்
நீயிருக்காதே !
ஓடாக் குதிரைஊர் போகா உயராத
உன்வாழ் வினில்பேர்வா ழா !
அலைகின்ற மேகம் மழையாகா.. கான்!
நிலையான நெஞ்சம் நலம்காணும்..கேள்!
-கங்கைமணி