பட்ஜெட்
இன்றைய பட்ஜெட்
சட்டமன்றத்தில் தாக்கல்
குற்றவாளியின் ஆசியுடன்
என ஆரம்பித்து
எப்பொழுதும் போல
சபாநாயக்கர்
எல்லாம் சரி என்று
எதிர்கட்சிகளும்
எப்பொழுதும் போல
அதே சம்பிரதாய
கண்டத்துடன்
சிறப்பான பட்ஜெட் என்று
தங்களை தாங்களே
புகழ்ந்து
வேறு யாரும் புகழமாட்டார்கள்
என்று
பல பல இலவச திட்டங்கள்
நல திட்டங்கள்
கடன் திட்டங்கள் என்று
தமிழ் நாட்டின் கடன்சுமை
மட்டும்
மூன்று இலட்சம்
கோடியை தாண்டி
அதே ஏறுமுகத்தில்
இவை யாவும்
நம் வரி பணத்தில்
என்று சொல்ல கூட
மனமில்லாமல்
பட்ஜெட் தாக்கல்
முடிந்தவுடன்
அவசரமாய் கணக்கீடு
ஆரம்பித்தனர்
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
எப்பொழுதும் போல
எவ்வளவு
கொள்ளையடிப்பதென
இது நமக்கான திட்டமென
அதே ஏக்கத்தோடு
நாம்
இதுவும் ஏமாற்றுவேலை
என்பதை உணராமல்
ந.சத்யா