முயற்சி

என் போல் யாருமில்லை ஆதலால் என்னை காதலிப்பதாக கூறினாய்.

நாணம் இருந்தும் ஏற்றுக்கொண்டேன்!

சிறிது நாட்களில் உனக்கு கடந்தகால காதலி இருந்ததாக கூறினாய்.

சீற்றம் இருந்தும் பொறுமை கொண்டேன்!

என்னுள் அவளை பார்ப்பதாய் கூறினாய்.

வலி இருந்தும் தாங்கி கொண்டேன்!

என்னை விட அவளே சிறந்தவள் என கூறினாய்.

பூகம்பம் வந்தும் புன்னகை பூத்தேன்!

ஆனால் இனி அந்த தீயில் விழாது வாழ வேண்டும் என உறுதி கொண்டேன்!!!

இறைவன் கொடுத்த தன்னம்பிக்கை,திறமை என்னும் இறுகரத்தின் துணை கொண்டு முன்னேறினேன்.

தொலை தூர பயணத்திற்கு பின்பு திரும்பி பார்த்தேன்.

தூரத்தில் சிறு புள்ளியாய் மட்டுமே தெறிந்தாய் நீ எனக்கு.

ஆனால் ஒரு வேறுபாடு,

பல சாதணைகளுடன் நான்,
மற்றொரு பெண்ணுடன் நீ.

எழுதியவர் : ஷாகிரா (16-Mar-17, 3:37 pm)
Tanglish : muyarchi
பார்வை : 551

மேலே