அலட்சியம்
காற்றுக்கு மின்விசிறி போதும்
மரங்களை வளர்க்கவில்லை..
ஒளிக்கு மின்விளக்குகள் போதும்
நிலவை சூரியனை ரசிக்கவில்லை..
குடிநீர் விற்பனைக்கு கிடைக்கும்
மழைநீர் சேகரிப்பு அவசியமில்லை..
அடுக்குமாடி குடியிருப்பு போதும்
நிலங்கள் இங்கே தேவையில்லை..
தானியங்கள் இறக்குமதி போதும்
விவசாயம் இங்கே அவசியமில்லை..
பயணிக்க வாகனங்கள் போதும்
கால்களை யாரும் நம்புவதில்லை..
பேசுவதற்கு கைபேசி போதும்
உறவுகளை யாரும் சந்திப்பதில்லை..
வேலைகளுக்கு இயந்திரம் போதும்
மனித சக்தி மதிக்கப்படுவதில்லை..
வாழ்வதற்கு பணம் போதும்
உடனிருப்பவரை கூட நேசிப்பதில்லை.