நண்பர்கள் கூட்டம்(நட்பு)

பள்ளி என்ற கோட்டைக்கு சென்று
கண்களின் பார்வையால் கவர்ந்து
அன்பு என்னும் பாசத்தை தெளித்து
பாசம் என்ற கயிற்றில் பினைக்கப்பட்டு
நேசம் என்ற பள்ளத்தில் தள்ளப்பட்டு
உறவு என்ற சொர்கத்தில் பழகி
தோல்வியின் போது தோள் கொடுத்து
உதவிய நண்பர்கள் கூட்டத்தில்
ஒரு சிறு விரிசல்
பிரிவு என்னும்
ஓர் நிகழ்வில் சந்தித்தோம்
வேலை செய்யும் இடத்தின் வாசல்
அக்கனம் என் நண்பர்கள் கூட்டம்
கனவாய் தெரிந்தன
எனினும்
எங்கள் நினைவு என்ற தோரணையில்
கோர்வையாக உள்ளோம்
எங்கள் கனவு,நினைவு என்ற
போதையிலும்
"நட்பு" என்ற
மந்திரத்தை உச்சரிப்போம்.

எழுதியவர் : சக்திவேல் (17-Mar-17, 9:01 pm)
பார்வை : 685

மேலே