மலரின் சிரிப்பு
யாரென அறியாது கள்ளம், கபடமில்லா அந்த மலரின் சிரிப்பைக் காணும் போதெல்லாம் எனது கவலைகளை மறக்கிறேன்...
அன்பு மேலிடக் குற்றமில்லாமல் அந்த மலரின் சிரிப்பையே மனதில் நினைக்கிறேன்....
உறவெனச் சொல்லி உள்ளம் மகிழ்ந்திட உடன்பிறந்தோர் யாருமில்லாவிடிலும் என்றும் வாடாத அந்த மலரின் நட்பொன்று கிடைத்தால் போதுமே....
உள்ளம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுமே....
பணமில்லா, ஆடம்பரமில்லா இந்த ஏழையை அந்த மலரும் தான் நட்பாக ஏற்றுவிடுமோ??
ஏற்றாலும் அந்நட்பு தான் ஆயுள் முழுவதும் தொடர்ந்திடுமோ???..
மனிதன் நினைத்தெல்லாம் நடந்துவிட்டால் மனிதனை மிஞ்சிய கடவுள் ஏது????...
மலரின் உதடுகளில் புன்னகையை மட்டுமே காணும் என்மீது மலரைப் பறிக்கத் துடிக்கிறேன் என பழி போடுவதும் ஏனோ?????...
அப்பழியாலே எனது உள்ளம் மீளாத்துயரத்தில் ஆழ்கிறதே....
என்னைக் காணாதவரை சிரித்திருந்த அந்த மலரின் வாடாத முகம், என்னைக் கண்டதும் வாடியதைக் கண்டு, மனதுள் நான் சிந்திய கண்ணீரை யாரறிவார்??...
மலரின் அந்தச் சிரிப்பை எனது பார்வைதான் தடுக்கிறதென்பதால் எனது பார்வையை துறக்கிறேன்....
அந்த மலரின் முகம் கண்ணெதிரில் கண்டாலும், காணாது செல்கிறது, அந்த மலர் தனது சிரிப்பை என்றும் இழந்துவிடக் கூடாதென்பதால்.....