தன்மானம்

தன்மானம்.

தன் மீதுடைய தன் மதிப்பு
தன்மானம் சுய கௌரவம் சுயமதிப்பு.
தன்மான நெஞ்சமென்றும் தாழ்விலா வானம்.
தன்னகத்து ஆளுமைத் தன்னம்பிக்கையே பலம்.

மனிதனோடொட்டிப் பிறந்தது தன்மான உணர்வு.
தனித்துவமானது மதிப்பானவுயிருக்குச் சமமான உணர்வு
இனிதானது இறுதி வரை உயிர்த்தெழுமுணர்வு.
இன்றியமையாத சிறப்புக் கொண்டது தன்மானம்.

சுயஅறிவு உயர்த்தல் சுய உழைப்பும்
சுயமதிப்பு பெருக்கும் சிறந்த சன்மானம்.
சுயமானம் பிறர் அனுதாபங்களை நிராகரிக்கும்.
தன்மானம் தீய செயல்களால் சுவீகரிக்கப்படும்.

மனிதனின் தன்மானம் பெறுமானம் மிக்கதென்று
மக்கா நகரப் புனிதத்திற்கு நிகராமென்று
மதித்து உவமித்தார் நபிகள் நாயகமன்று.
மரியாதையாய் தன்மானம் காத்து வாழ்வதுயர்வு.

தலையிலிருந்து விழுந்த மயிருக்கு ஒப்பாகிறார்
தன்மானம் இழப்பவர் என்கிறார் திருவள்ளுவர்.
தம் மானத்திற்காய் ஆதாம் ஏவாளர்
நாணம் காத்து சுவனத்து இலையாடையணிந்தார்.

இனமானம் மொழியும் ஒருவன் தன்மானமே
தன்மானம் இல்லாதோன் நிலை நிர்வாணமே.
அவமானம் கொள்ள விரும்பாதது தன்மானமே.
தன்மானத்தனுக்கு வெற்றிப் படி துரோகமே.

வறியவன் தன்மானம் வெகு உயரம்
வரையறையற்ற இழப்புகளோடு பிணைந்த துயரம்.
வயிற்றுப் பிழைப்பாலிழக்கிறாள் பரத்தை தன்மானம்.
மதுவிற்கும் இலவசத்திற்கும் தன்மானம் அடமானம்.

தன்மானமிழந்து பிறரை வணங்குதல் அவமானம்.
தன்னை மதிக்காதவன் பின்னாலேகுதல் அவமானம்.
தன்மானம் விலை போனால் தலைமறைவாகிறார்.
தன்மானம் மலையேறினால் தற்கொலை செய்கிறார்.

தம் மதம் மாறுதல் பெருமவமானம்.
தாய் மதம் பேணல் அபிமானம்.
தாரள செல்வம் சேருகையில் பணிவும்
வறுமையில் பணியாமையும் தன்மான உணர்வு.


பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
7- 2016

எழுதியவர் : பா வானதி வேதா. இலங்காதிலக (21-Mar-17, 5:24 pm)
Tanglish : thanmaanam
பார்வை : 1038

மேலே