வெள்ளை சுடிதார் வெண்தாமரை

வெள்ளை சுடிதார் அணிந்து வருகிறாய்
வெண்தாமரையா என குழப்பம் !
தாமரை தரை நடந்து வருகிறது !
தத்தளிக்கிறது மனது !
அருகில் சென்று ரசிக்க வேண்டும்
அருகில் சென்று பேசவேண்டும்
பேச வார்த்தை வர வேண்டும்
மீண்டும் தத்தளிக்கிறது மனது !
உன் பார்வையின் தேடல் புரிகிறது !
அருகேதான் செல்ல முடிந்தது !
எங்கிருந்தோ வந்த ..
சிறு சுழல் காற்று செய்த புண்ணியம்
உன் சுடிதாரின் துப்பட்டா என் முகம் தழுவி விட்டு
போகிறது !
மீண்டும் தத்தளிக்கவில்லை மனம் !
தறிகெட்டு வானுக்கும் மண்ணுக்குமாய் !
எகிறி எம்பி குதிக்கிறது !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (21-Mar-17, 7:28 pm)
பார்வை : 365

மேலே