முன்னாள் காதலி

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்

ஹே முன்னாள் காதலி ....

தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
என்னுள் நுழைந்திடும் போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெளிக்கிளம்பிடும் போதோ தொடர் பூகம்பம் விளைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய்

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

எழுதியவர் : சினிமா பாடல் (22-Mar-17, 10:35 am)
சேர்த்தது : கிரிஜா
Tanglish : munnaal kathali
பார்வை : 373

மேலே