அவிழும் அழகே

பிரிவில் புரியும்
பிரியம் இதுவோ..
தொலைவில் கரையும்
நிலவும் இதுவோ..?
எந்தன் கண்ணீர்
சுடுமோ குளிரோ..
அதை நீ அறிய
அருகே வருவாயோ..?
தூரம் சென்றாய்
சுகமே இல்லை..
பாரம் என்றும்
பிரியாத் தொல்லை..!
அழகாய் இருந்தேன்
அருகில் இருந்தாய்..
அதை எண்ணி
நாள் நீரினில்
நான் நீந்துவேன்..!
இதமாய் இருந்தேன்
இதயம் கலந்தாய்..
அதை எண்ணி
என் ஜீவன்
நான் மீட்டுவேன்..!
அழகான சேலை
அதற்கேற்ற மாலை
தினந்தோறும் கல்யாணக்
கனவோடு நான்..!
விடியாதோ காலை
தெறியாதோ சோலை
ஏக்கங்கள் என்றென்றும்
நெஞ்சோடு தான்..!
உனை நான் நினைக்கும்
நிமிடம் கனியே..
ஏன் அங்கு நீ மட்டும்
தனியே தனியே.!
மடியில் உறங்கும்
மழலைப் பனியே..
ஏன் இங்கு நான் மட்டும்
தனியே தனியே..!
விரைவில் வர வேண்டும்
விரலை விரல் தீண்டும்
அந்நேரம் அழகானக் காதல்
அவிழ்ந்தே விழும் மீண்டும்..!!
செ.மணி