புதுக்கவிதை

அழகாய்
என் கண்களில் நுழைந்து...
ஈரநெஞ்சில்
காதல் விதையாய் வீழ்ந்து
எப்படி வளர்ந்தாய்...
என்னை மயக்கும் இளம் கவிதையாய்?

மிக எளிய நடையில்
நான் வரைந்த புதுக்கவிதை
உனக்கு புரியவில்லையா?
இல்லை பிடிக்கவில்லையா...?
என்னையும் என் காதலையும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Mar-17, 9:33 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : puthukkavithai
பார்வை : 287

மேலே