அவளிடம் பிடித்த பொறாமை
அவள் வீட்டிலுள்ள பூக்கள்
அவளுடைய முகம் பார்க்கத்தான் மலர்ந்தன
என்று தெரிந்ததும், அதை சூடிக் கொண்டாள்.
மலர்கள் வாடி விட்டன..
நானும் அவள் முகம் பார்க்கத்தான் ஏங்குகிறேன்
என்று தெரிந்ததும், என்னைத் தவிக்க விட்டாள்.
என் மனம் துடித்து விட்டது..
ஆனாலும் பிடித்திருக்கிறது அவளுடைய இந்தப் பொறாமை.