உதிர்ந்த உறவுகள் --- அகவற்பா
உதிர்ந்த உறவுகள் !!! --- அகவற்பா
உதிர்ந்ததே உறவுகள் உணர்வதின் நினைவுகள்
மதிக்கா மக்களின் மனிதம் கெட்டதால்
விதியை நொந்து வீணிலும் தவித்திடக்
கதியாய் அன்பினைக் கனவிலும் மறந்தவர்
சதிகளும் உலகில் சண்டையும் நிரந்தரம் !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்