நீ எனக்கு
வானவில்,வண்ணத்துப்பூச்சி,
வண்ண மீன்கள்,வகையொத்த மலர்கள்,
மயிலிறகு, மழை நனைத்த மரம்,
மலர் சுமந்த வனம், பனி சுமக்கும் புல்,
ஆனந்த குதிப்பில் அலைகள்,
தற்கொலை செய்யும் அருவிகள்,
மேகம் தோட்ட மலைகள்,
வெள்ளிரத தேவதை( நிலா ),
முன்விடியல் வானம்,
நீல போர்வை போர்த்திய பூமி
இவையனைத்தும்
நீ
எனக்கு !?.